இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது, சுவச்ச்தா ஹி சேவா - 2025 என்ற பிரச்சாரத்தினை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதியன்று நிறைவு செய்தது.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில், நாடு முழுவதும் உள்ள அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தூய்மை இயக்கங்கள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், மரம் நடுதல், கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் நடைபயணங்கள் ஆகியவை அடங்கும்.
மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளானது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது என்பதோடு இது சுவச் பாரத் திவாஸ் என்றும் கொண்டாடப் படுகிறது.