இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் தனது அலுவலகத்தின் “கழிவிலிருந்து வளம் (சொத்து)” என்ற திட்டத்தின் கீழ் “சுவச்தா சார்தி சமூகம்” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
இது அறிவியல் ரீதி மற்றும் நீடித்த நிலை ஆகிய வகையில் கழிவு மேலாண்மையில் உள்ள மகத்தான சவாலைச் சமாளிப்பதில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், சமூகத் தொழிலாளர்கள் / சுயஉதவிக் குழுக்கள் மற்றும் நகராட்சி / சுகாதாரத் தொழிலாளர்கள் ஆகியோரை அங்கீகரிப்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சமூகத்தின் கீழ் வழங்கப்படும் மூன்று வகையான விருதுகள் பின்வருமாறு
வகை A: கழிவு மேலாண்மை சமூகப் பணிகளில் ஈடுபடும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான விருது.
வகை பி: கழிவு மேலாண்மை சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கான (இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள்) விருது.
வகை சி: சமூகத்தில் பணிபுரியும் குடிமக்கள் மற்றும் தங்கள் வேலைத் தேவைகள் / விளக்கங்களின் கீழ் குறிப்பிடப் பட்டுள்ள வரம்புகளுக்கு அப்பால் பணிபுரியும் சுய உதவிக் குழுக்கள், நகராட்சி அல்லது சுகாதாரத் தொழிலாளர்கள் ஆகியோருக்கான விருது.
கழிவிலிருந்து வளம்
கழிவிலிருந்து வளம் என்ற திட்டம் என்பது ஆற்றலை உருவாக்குவதற்கும் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கும் வளங்களைப் பிரித்தெடுப்பதற்கு வேண்டி கழிவுகளைச் சுத்திகரிப்பதற்கும் தேவைப்படும் தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டு, அவற்றை மேம்படுத்த மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு உதவும் ஒரு திட்டம் ஆகும்.
இது பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆலோசனைக் குழுவின் (PM-STIAC - Prime Minister’s Science, Technology, and Innovation Advisory Council) ஒன்பது தேசியத் திட்டங்களில் ஒன்றாகும்.