சுவதார்கிரே திட்டம் (கடினமான சூழ்நிலையில் இருக்கும் பெண்களுக்கான திட்டம்)
July 30 , 2017 3005 days 2423 0
இந்த திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் (Ministry of Women and Child Development ) செயல்படுத்துகிறது.
வாழ்க்கையில் பாதிக்கப்பட்டு கடினமான சூழலில் இருக்கும் பெண்களின் மறுவாழ்வுக்கு ஆதரவளித்து, அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உதவுகிறது.
பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு உணவு , உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்க வழிவகை செய்வதன் மூலம், அவர்களுக்குப் பொருளாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
உணவு, உடை, மருத்துவ வசதிகளை வழங்கும் தற்காலிக குடியிருப்பு வசதிகள்
பொருளாதார ரீதியான மறுவாழ்வுக்கு தொழில் மற்றும் மேம்பாட்டு பயிற்சி அளித்தல்.
உளவியல் ரீதியான ஆலோசனை, விழிப்புணர்வு மற்றும் நடத்தை பயிற்சிகள்
சட்ட உதவி மற்றும் வழிகாட்டுதல்
தொலைபேசி மூலமாக ஆலோசனை வழங்குதல்
இத்திட்டத்தின் மூலம் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பயன் அடைவார்கள் . ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 பெண்களைக் கொண்டிருக்கும் ‘ஸ்வாதர் கிரே’ அமைக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.