சுவர்னிம் விஜய் வர்ஷ் ஆனது 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிற்கு எதிரான வங்க தேசத்தின் விடுதலைப் போரின் 50 ஆண்டுகளை அனுசரிக்கின்றது.
ஐஎன்எஸ் சுபேதா என்பது உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஒரு கடற்கரையோர ரோந்துக் கப்பலாகும். குலிஷ் என்பது உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஒரு வழிகாட்டு ஏவுகணைப் பாதுகாப்புக் கப்பலாகும்.
இந்தக் கப்பல்கள் தற்பொழுது நடைபெற்று வரும் “சுவர்னிம் விஜய் வர்ஷ்” என்ற நிகழ்வை அனுசரிப்பதற்காக வங்க தேசத்திற்குச் செல்கின்றன.
1971 ஆம் ஆண்டு விடுதலைப் போரின் போது உயிரிழந்த இந்திய மற்றும் வங்க தேசப் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக முதல்முறையாக மோங்லா துறைமுகத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியக் கடற்படைக் கப்பல் இது ஆகும்.
மேலும் இது சாகர் எனப்படும் பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்பதின் வரிசையில் இந்தப் பிராந்தியத்தில் அமைதி, நிலைப்புத் தன்மை, சிறந்த சூழலைப் பராமரிப்பதற்கான இந்தியாவின் பொறுப்புமிக்க தன்மை மற்றும் தீர்வு காணும் அணுகுமுறையை எடுத்துக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.