சுவஸ்த் நாரி சஷக்த் பரிவார் அபியான் இயக்கமானது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
இந்த இயக்கமானது, காந்தி ஜெயந்தியுடன் ஒருங்கே சேர்ந்து, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி வரை நடைபெறும்.
ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார முகாம்களை ஏற்பாடு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இரத்த சோகை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், காசநோய் மற்றும் அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய்க்கான பரிசோதனைகளை வழங்குகிறது.
மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனைகள், நோய்த்தடுப்பு மருந்து வழங்குதல் மற்றும் MCP அட்டைகளின் விநியோகம் மூலம் தாய் மற்றும் குழந்தை நல பராமரிப்பு ஆதரிக்கப்படுகிறது.
வெளிப்படைத்தன்மைக்காக SASHAKT வலை தளம் மூலம் நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் தரவு அறிக்கையிடல் மேற்கொள்ளப்படும்.
இந்த முன்னெடுப்பானது தாய் மற்றும் குழந்தைகளின் உயிரிழப்பைக் குறைப்பதையும், வசதி குறைந்த பகுதிகளில் சுகாதார அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.