சுவாசத்திற்கான போராட்டம் - 2019 ஆம் ஆண்டின் அறிக்கை
November 14 , 2019 2093 days 735 0
யுனிசெஃப் அமைப்பினால் “சுவாசத்திற்கான போராட்டம் - குழந்தைப் பருவ நிமோனியா மீதான நடவடிக்கைக்கான அழைப்பு” என்ற ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, நிமோனியா இந்தியாவில் உள்ள குழந்தைகளைப் பாதித்து, அவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துவதில் முன்னணி வகிக்கின்றது. 2018 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 வயதிற்குட்பட்ட 14ற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
ஊட்டச்சத்துக் குறைபாடு (53%) மற்றும் மாசுபாடு (வெளிப்புறக் காற்று மாசுபாடு - 27% & உட்புற காற்று மாசுபாடு - 22%) ஆகியவற்றுடன் 2018 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,27,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்றுள்ளது.
குழந்தை நிமோனியா இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்ட இறப்புகள் நைஜீரியா (162,000), இந்தியா (127,000), பாகிஸ்தான் (58,000), காங்கோ ஜனநாயகக் குடியரசு (40,000) மற்றும் எத்தியோப்பியா (32,000) ஆகிய நாடுகளில் நிகழ்ந்துள்ளன.
நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கிற்கான உலகளாவிய செயல் திட்டத்தின் படி, 2025 ஆம் ஆண்டிற்குள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா இறப்பு விகிதத்திற்கான உலகளாவிய இலக்கானது பிறக்கும் 1000 குழந்தைகளுக்கு மூன்று ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.