சுவாசம் வழியே உள்ளிழுக்கக்கூடிய கோவிட்-19 தடுப்பு மருந்து
November 3 , 2022 1015 days 504 0
ஷாங்காயில் உள்ள அதிகாரிகள், கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக உலகில் முதல் முறையாக சுவாசம் வழியே உள்ளிழுக்கக் கூடிய தடுப்பு மருந்தினை வழங்கத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு உத்வேக தடுப்பு மருந்தாக இந்த தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த சுவாசம் வழியே உள்ளிழுக்கக்கூடிய தடுப்பு மருந்தானது சீன உயிரி மருந்து உற்பத்தி நிறுவனமான கான்சினோ பயோலாஜிக்ஸ் இங்க் உருவாக்கியுள்ளது.
இது அதன் ஒற்றைத் தவணை அடினோவைரஸ் தடுப்பூசியின் காற்றுப்படல வடிவம் ஆகும்.