பூமியிலிருந்து 154 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள TOI-1846 b என்ற புதிய கிரகத்தை நாசா கண்டறிந்துள்ளது.
இந்தக் கிரகம் ஆனது பூமியை விட இரண்டு மடங்கு பெரியது மற்றும் நான்கு மடங்கு கனமானது.
இது சிறிய பாறை கிரகங்களுக்கும் பெரிய வாயு கோளத்திற்கும் இடையிலான "radius gap" என்று அழைக்கப்படும் ஓர் அரிய குழுவில் உள்ளது.
TOI-1846 b ஆனது லைரா விண்மீன் தொகுப்பில் ஒரு செந்நிறக் குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது மற்றும் நான்கு நாட்களுக்குள் அதன் முழு சுற்றுப்பாதையையும் சுற்றி முடிக்கிறது.
இந்தக் கிரகம் ஆனது பனி அடுக்கு அல்லது ஆழமற்ற கடலுடன் கூடிய மெல்லிய வளி மண்டலத்தைக் கொண்டிருந்தாலும், தீவிர வெப்பம் காரணமாக இங்கு உயிர்கள் வாழ சாத்தியமில்லை.