சூயஸ் கால்வாயின் புதிய தட விரிவாக்கத்தின் சோதனை ஓட்டம்
January 2 , 2025 265 days 265 0
சூயஸ் கால்வாயின் தெற்கு முனைக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 10 கிலோ மீட்டர் தொலைவிலான கால்வாயின் சோதனையினை எகிப்து வெற்றிகரமாக மேற் கொண்டுள்ளது.
சமீபத்திய விரிவாக்கம் ஆனது கால்வாயின் இருவழிப் பகுதியின் மொத்த நீளத்தினை 72 கிலோ மீட்டரில் இருந்து முதல் 82 கிலோ மீட்டராக நீட்டித்துள்ளது, இதன் மூலம் இந்தக் கால்வாயின் மொத்த நீளம் 193 கிலோ மீட்டராக உள்ளது.
சோதனை ஓட்டத்தின் போது இரண்டு கப்பல்கள் கால்வாயின் இருவழிப் பகுதியின் புதிய பகுதி வழியாக எந்த அசம்பாவிதமும் இல்லாமல் கடந்து சென்றன.
இந்த விரிவாக்கம் ஆனது தினசரி கூடுதலாக 6 முதல் 8 கப்பல்கள் இயக்க இயலும் என்ற வகையில் கால்வாயின் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தி, சாத்தியமான அவசரநிலைகளில் போக்குவரத்தினை கையாளுவதற்கான அதன் திறனையும் நன்கு மேம்படுத்துகிறது.
"பிராந்தியச் சவால்கள்" காரணமாக, 2024 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் வருவாயில் சுமார் 7 பில்லியன் டாலர்களை எகிப்து அரசு இழந்தது, இது 2023 ஆம் ஆண்டில் பதிவான வருவாயில் இருந்து 60% சரிவு ஆகும்.