ESA (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) மற்றும் நாசாவின் சூரிய சுற்றுக்கலம் (ஆர்பிட்டர்) ஆகியவை சூரியனில் இருந்து சூரிய ஆற்றலூட்டப்பட்ட எலக்ட்ரான்கள் (SEE) தோன்றியதைக் கண்டறிந்தன.
இந்த ஆய்வு SEE தோற்றங்களை, சூரிய சுடரொளிகள் மற்றும் சூரிய வெப்ப உமிழ்வுகளுடன் (CMEs) இணைத்து, இரண்டு வெவ்வேறு உமிழ்வுச் செயல்முறைகளை வெளிப்படுத்தியது.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதங்களுக்கு இடையில், இந்த விண்கலம் ஆனது பத்து உள்கல கருவிகளைப் பயன்படுத்தி 300 க்கும் மேற்பட்ட SEE நிகழ்வுகளைக் கண்டறிந்தது.
விண்வெளியில் தாமதமான உமிழ்வு அல்லது கொந்தளிப்பு காரணமாக சூரிய நிகழ்வுகளுக்கும் SEE கண்டறிதலுக்கும் இடையிலான நேர இடைவெளி இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
SEE நிகழ்வினை புரிந்து கொள்வது விண்வெளி வீரர்கள் மற்றும் செயற்கைக் கோள்களை சூரியக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கவும், விண்வெளி சார்ந்த வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தவும் உதவும்.