TNPSC Thervupettagam

சூரிய ஒளி இடர் குறைப்பு முன்முயற்சி

February 7 , 2020 2007 days 752 0
  • உலக வங்கி மற்றும் எரிசக்தித் துறை மேலாண்மை உதவித் திட்டமானது (WB-ESMAP - World Bank– Energy Sector Management Assistance Program) பின்வரும் அமைப்புகளுடன் இணைந்து சூரிய ஒளி இடர் குறைப்பு முன்முயற்சியை (SRMI - Solar Risk Mitigation Initiative) உருவாக்கியுள்ளது.
    • ஏஜென்ஸ் ஃபிராங்காயிஸ் டி டெவலப்மென்ட் (AFD - Agence Française de Développement),
    • சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (International Renewable Energy Agency - IRENA) மற்றும்
    • சர்வதேச சூரிய ஒளிக் கூட்டிணைவு (International Solar Alliance - ISA).
  • SRMI என்பது தனியார் முதலீடுகளை ஈர்க்கக் கூடிய நீடித்த சூரிய ஒளித் திட்டங்களை உருவாக்குவதில் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பொது நிதியியல் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்க இருக்கின்றது.
  • இது சூரிய ஒளி தொடர்பான இடரைத் தணிப்பதற்காக பின்வரும் மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. அவையாவன:
    • நீடித்த சூரிய ஒளி இலக்குகள்,
    • வெளிப்படையானக் கொள்முதல்,
    • சாத்தியமான இடர் குறைப்புப் பாதுகாப்பு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்