சூரிய ஒளி மற்றும் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செயற்கை இலை செய்யும் CSIR விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
September 8 , 2017 2812 days 1051 0
CSIR (Council of Scientific and Industrial Research) விஞ்ஞானிகள் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்குவதற்காக சூரிய ஒளியை கவர்ந்து கொள்ளும் ஒரு விதமான செயற்கை இலையை உருவாக்கியுள்ளனர். இந்த மேம்பாடு எதிர்காலத்தில் மகிழுந்துகளுக்கு சுற்றுச்சூழலுக்குத் தீங்கு தராத தூய்மையான எரிபொருளை உருவாக்கித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் உள்ள மிகச்சிறிய சன்னமான கம்பியிலாக் கருவி தாவர இலைகளைப் போன்று தோற்றமளித்து சூரிய ஒளியிலிருந்தும் தண்ணீரிலிருந்தும் ஆற்றலை உற்பத்தி செய்யும்.
எப்பொழுது பார்க்கக்கூடிய ஒளி தாக்குகிறதோ அப்பொழுது செமிகண்டக்டர்ஸ் எனப்படும் குறைகடத்திகளும் எலக்ட்ரான்களும் மின்னாற்றலை உற்பத்தி செய்வதற்காக ஒற்றைத் திசையில் இயங்கும். இந்த மின்சக்தி கணப்பொழுதில் தண்ணீரை ஹைட்ரஜனாக பிரிக்கும்.
தற்சமயம் ஹைட்ரஜன் ஆனது புகைபடிம எரிபொருள்களிலிருந்து நீராவியை சீரமைக்கும் முறையில் தயாரிக்கப்படுகிறது.
இம்முறையில் உலக வெப்பமயமாதலை அதிகரிக்கும் பசுமைக் குடில் வாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடு அதிக அளவில் வெளியிடப்படுகிறது.