சூரிய ஒளி மின்சக்தி அதிகப்படியான உற்பத்தித் திறன் அபாயம்
September 4 , 2026 9 days 64 0
2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்தியாவின் சூரிய ஒளி மின்னழுத்த (PV) தொகுதி உற்பத்தித் திறன் 233 ஜிகாவாட்டை (GW) எட்டியுள்ளது, இது அதிகப்படியான திறன் மற்றும் பலவீனமான மூல உற்பத்தி பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்தியா 233 ஜிகாவாட் சூரிய ஒளி மின்னழுத்ததொகுதித் திறனைக் கொண்டிருந்தது, ஆனால் சுமார் 35 ஜிகாவாட் மின்கலத் திறன் மட்டுமே இருந்தது மற்றும் இங்காட் / உலோகக் கட்டி மற்றும் செதில்(wafer)/தகடுத் திறன் மிகக் குறைவாகவே இருந்தது, இது ஒரு பெரிய உற்பத்தி இடைவெளியைக் காட்டுகிறது.
தொகுதித் தொழிற்சாலைகள் 35% முதல் 40% வரையிலான பயன்பாட்டில் மட்டுமே இயங்கி வந்தன, அதே நேரத்தில் மேலும் 135 ஜிகாவாட் திறன் திட்டமிடப்பட்டுள்ளது அல்லது கட்டுமானத்தில் இருந்தது.
தரவு மையங்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் ஏற்றுமதிகள் 2030 ஆம் ஆண்டுக்குள் 17 ஜிகாவாட் முதல் 22 ஜிகாவாட் வரை சூரிய தேவைக்குச் சேர்க்கப்படலாம், ஆனால் இது எதிர்பார்க்கப்படும் உபரியை உள்வாங்காது.
இந்தியா 2026 ஆம் நிதியாண்டில் சுமார் 4.5 ஜிகாவாட் சூரிய மின் தகடுத் தொகுதிகளை ஏற்றுமதி செய்தது, இதில் கிட்டத்தட்ட 97% அமெரிக்காவிற்குச் சென்றது, இது அதிக ஏற்றுமதி சார்பை உருவாக்குகிறது.
சிறிய ஒருங்கிணைக்கப்படாத உற்பத்தியாளர்கள் மற்றும் பழைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவோர் அதிக அபாயங்களை எதிர்கொள்கின்றனர், அதே நேரத்தில் இந்தியாவின் தொகுதித் திறனில் 70%க்கும் அதிகமான பகுதியை TOPCon ஏற்கனவே கொண்டுள்ளது.