சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் பொருட்களுக்குத் தடை - பலாவு
November 8 , 2018 2461 days 958 0
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கூறுகளைக் கொண்ட சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் பொருட்களுக்குத் தடை விதித்த (sunscreen products) உலகின் முதலாவது நாடாக தென் பசிபிக் தீவில் உள்ள நாடான பலாவு உருவெடுத்துள்ளது.
நெகேவின் பென்-குரியன் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது நீந்துபவர்களின் தோல், நகராட்சி கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கடலோர கழிவுநீர் அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் ஆக்ஸிபென்சோன் பவளப் பாறைகளை மாசுபடுத்துகிறது எனக் கண்டறிந்துள்ளது.
இந்த தடை செய்யப்பட்ட பொருட்கள் சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கூறுகளை உடைய திரவம் அல்லது நறுமணப் பொருட்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் சூரிய ஒளிப் பாதுகாப்புக் காரணிகள் (SPF - Sun Protection Factor) ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளன.
மேலும் ஆக்ஸிபென்சோன், ஆக்டினோக்ஸ்ஸேட், ஆக்டோக்ரைலீன், 4-மெத்தில் பென்சிலைடின் கேம்ப்போர் மற்றும் பாரபென்ஸ் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.
நான்கு பாரபென்கள், ட்ரைக்ளோசான் மற்றும் பீனாக்ஸி எத்தனால் ஆகியவை நுண்ணுயிரி எதிர் பதனப் பொருள்களாகும். மேலும் இவை தலையை சுத்தம் செய்யும் நீர்மங்கள், ஈரப்பத பொருட்கள், திரவ சோப்புகள் மற்றும் தலைமுடி உலர்த்திகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
முன்னதாக மே 4 அன்று, ஹவாய் சட்டமன்றமானது பவளப் பாறைகள் வெளிறலைத் தடுப்பதற்காக 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஆக்ஸிபென்சோனைத் தடை செய்வதாக அறிவித்துள்ளது.