சூரிய ஒளியின் மூலம் செயல்படும் உப்பு நீரை குடிநீராக மாற்றும் ஆலை
March 23 , 2019 2304 days 850 0
மதராஸில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உப்பு நீரை சூரிய ஒளியின் மூலம் குடிநீராக மாற்றும் நாட்டின் முதலாவது ஆலையை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் அமைத்துள்ளனர்.
இந்த சோதனைத் திட்டமானது மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தினால் நிதியளிக்கப்படுகிறது.
இந்த ஆலையால் உற்பத்தி செய்யப்படும் குடிநீரில் 2 பிபிஎம் அளவிலான கரைசல் உப்புகள் மட்டுமே உள்ளது. குடிநீருக்காக, உலக சுகாதார நிறுவனமானது 500 பிபிஎம் (ppm) அளவிலான நீரைப் பரிந்துரைக்கிறது.
எனவே, இது பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் உள்ளூர் நகராட்சி நீருடன் கலக்கப்படுகிறது.