TNPSC Thervupettagam

சூரிய ஒளியைப் பெறும் குழாய்த் தொழில்நுட்பம்

March 15 , 2020 2062 days 752 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையமான ARCI அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செலவு குறைந்த சூரிய ஒளியைப் பெறும் குழாய்த் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
  • உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குழாய்கள் சூரிய சக்தியை உறிஞ்சி, அந்த  வெப்பத்தைத் தேவையான பயன்பாட்டிற்குத் தக்கவாறு மாற்றுகின்றன.
  • இவை குறிப்பாக இந்திய வானிலை நிலைமைகளான அரிப்பிற்காக அதிக எதிர்ப்புத் தன்மையை வழங்குகின்றன.
  • இந்தத் தொழில்நுட்பமானது ஈரத் தன்மை கொண்ட ஒரு இரசாயன செயல்முறையாகும். இந்தத் தொழில்நுட்பம்  தொழில்துறை வெப்பப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் துரு ஏறா எஃகு குழாய்களுக்கு இரசாயனம் பூசப் பயன்படுத்தப் படுகின்றது.
  • இந்தத் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்படும் குழாய்கள் 93% கதிரியக்க ஆற்றலையும் 14% உமிழ்வையும் உறிஞ்சுகின்றன.
  • உமிழ்வு என்பது ஒரு கதிர்வீச்சு மேற்பரப்பின் ஒரு பகுதியில் வெளிப்படும் ஒளியின் அளவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்