சூரிய சக்தி சார் கழிவுகள் குறித்த முதல் விதிமுறை புத்தகம்
June 19 , 2025 42 days 83 0
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) ஆனது இந்த வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இது நிராகரிக்கப்பட்ட சூரிய ஒளிமின்னழுத்த (PV) தொகுதிகள், தகடுகள் மற்றும் கலன்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பது, கையாளுவது மற்றும் வேறிடத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை வழங்குகிறது.
2022 ஆம் ஆண்டு மின் கழிவு (மேலாண்மை) விதிகளின் கீழ் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டின் மின் கழிவு (மேலாண்மை) விதிகளின் Vவது அத்தியாயத்தின் கீழ், சூரிய சூரிய ஒளி மின்னழுத்த (PV) கழிவுகள் 'CEEW 14' வகை மின் கழிவுகளாக வகைப் படுத்தப் பட்டுள்ளன.