சூரிய சக்தியில் இயங்கும் MAPSS கண்காணிப்பு ஆளில்லா விமானங்கள்
January 18 , 2026 4 days 55 0
சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் கண்காணிப்பு ஆளில்லா விமானமான நடுத்தர உயரத்தில் இயங்கும் நிலையான கண்காணிப்பு அமைப்பிற்கான (MAPSS) 168 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் இந்திய இராணுவம் கையெழுத்திட்டது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் சிறப்பான பாதுகாப்புத் துறை புத்தாக்கத்திற்கான (iDEX) கட்டமைப்பின் கீழ் பெங்களூருவில் உள்ள நியூஸ்பேஸ் ரிசர்ச் & டெக்னாலஜிஸ் MAPSS அமைப்பினை உருவாக்கியுள்ளது.
சூரிய சக்தியில் இயங்கும் இந்த ஆளில்லா விமானம் மோதல் நிறைந்த எல்லைகளில் நீண்ட கால உளவு, கண்காணிப்பு மற்றும் உளவுப் (ISR) பணிகளை செயல்படுத்துகிறது.
இதன் செயல்பாட்டு நன்மைகளில் இயக்கத்தைக் கண்காணித்தல், எல்லை செயல்பாட்டைக் கண்காணித்தல், தொலைதூரப் பகுதிகளில் தகவல் தொடர்புகளை ஆதரித்தல் மற்றும் அமைதியான மின்சார உந்துவிசை காரணமாக கண்டறியப் படுவதற்கான குறைக்கப்பட்ட வாய்ப்பு ஆகியவை அடங்கும்.
MAPSS வடிவம் செயல்பாட்டு சூழல்களில் சோதனைகளை நிறைவு செய்துள்ளது மற்றும் சுமார் 26,000 அடி உயரத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக இயங்குந் தன்மையை நிரூபிக்கும் முந்தைய உயரமான இடத்திலும் சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானச் சோதனைகளை நிறைவு செய்துள்ளது.