சூரிய சக்தியில் இயங்கும் நீரேற்றிகள் நிறுவலில் உலக சாதனை
December 11 , 2025 15 hrs 0 min 8 0
மகாராஷ்டிரா அரசானது 30 நாட்களில் கட்டமைப்பிற்குள் உட்படாத 45,911 சூரிய சக்தியில் இயங்கும் வேளாண் நீரேற்றிகளை நிறுவி, கின்னஸ் உலக சாதனையைப் படைத்தது.
இந்த நிறுவல்கள் PM-KUSUM (பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாபியான்) திட்டத்தின் கூறு B மற்றும் மாகேல் தியால சவுர் க்ருஷி பம்ப் யோஜனா ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
இம்மாநில அரசானது இதுவரையில் 7.47 லட்சத்திற்கும் மேற்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் நீரேற்றிகளை நிறுவியுள்ளது என்பதோடு மேலும் இது 10.45 லட்சத்தை இலக்காகக் கொண்டுள்ளது.