TNPSC Thervupettagam

சூரிய சுழற்சி குறித்த தகவல்கள்

November 24 , 2025 3 days 29 0
  • 100 ஆண்டுகளுக்கும் மேலாக, கொடைக்கானல் சூரிய ஆய்வகத்திலிருந்து (KoSO) பெறப் பட்ட படங்களைப் பயன்படுத்தி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சூரியனின் துருவ காந்தப் புலங்களை மறுகட்டமைத்தனர்.
  • இந்த ஆய்வு ஆனது இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் கூட்டுப் பணியாளர்களுடன் ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் (ARIES) நடத்தப்பட்டது.
  • 1904 ஆம் ஆண்டு முதல் Ca II K அலைநீளத்தில் மேற்கொள்ளப்படும் KoSO அவதானிப்புகள், பிரகாசமான (ஒளிர்) சூரிய கரும்புள்ளி மற்றும் வலையமைப்புகள் எனப்படும் பிரகாசமான பகுதிகள் உள்ளிட்ட  ஒளிபுகு சூரியப் புற வளி மண்டலத்தின் / குரோமோஸ்பெரிக் செயல்பாட்டை கண்காணிக்கின்றன.
  • AI/ML (செயற்கை நுண்ணறிவு / இயந்திரக் கற்றல்) வழிமுறைகள் கடந்த நூற்றாண்டில் துருவப் புல வலிமைக்கான பதிலீட்டுத் துருவ வலையமைப்பு அம்சங்களை அடையாளம் கண்டன.
  • சூரியச் சுழற்சி 25 உள்ளிட்ட சூரிய செயல்பாடு மற்றும் செயற்கைக் கோள்கள், GPS மற்றும் மின் கட்டமைப்புகளைப் பாதிக்கும் சாத்தியமான சூரியப் புயல்களைக் கணிக்க இந்த மறுகட்டமைப்பு உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்