சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்திலிருந்து வரும் சமிக்ஞைகள்
October 16 , 2021 1402 days 618 0
நெதர்லாந்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சக்திவாய்ந்த ரேடியோ அலைவாங்கியான (antenna) குறை அதிர்வெண் வரிசை (Low – frequency Array – LoFAR) அமைப்பானது சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்திலிருந்து வரும் சமிக்ஞைகளைச் சேகரித்தது.
முதன்முறையாக இவர்கள் 19 தொலைதூர குள்ளக் கோள்களிலிருந்து சில சமிக்ஞைகளைக் கண்டறிந்துள்ளனர்.
அவற்றில் 4 குள்ளக் கோள்கள், தன்னைச் சுற்றி வரும் வகையிலான கோள்களைக் கொண்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நட்சத்திரங்களைச் சுற்றி, மறைந்திருக்கும் கோள்கள் இருப்பதை இந்த நிகழ்வு குறிக்கிறது.
மேலும் புவியைத் தவிர சூரிய மண்டலத்தில் (அ) அதற்கு அப்பாற்பட்ட பகுதியில் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்ற கேள்விக்கும் இதன் மூலம் பதிலளிக்க இயலும்.