TNPSC Thervupettagam

சூரியக் கதிர்வீச்சுப் புயல்

February 11 , 2026 3 days 60 0
  • ஒரு சக்திவாய்ந்த சூரியச் சுடரொளி வீச்சு புவி காந்தப் புயலைத் தூண்டியதைத் தொடர்ந்து, லடாக்கின் ஹன்லேவில் ஒரு அரிய சிவப்பு தென்முனைச் சுடரொளி காணப் பட்டது.
  • இந்த நிகழ்வு X-வகை சூரிய சுடரொளி வெடிப்பைத் தொடர்ந்து நிகழ்ந்தது என்ற நிலையில் இது சூரிய வெடிப்பின் வலிமையான வகையாகும்.
  • இந்த சுடர் பூமியின் காந்த மண்டலத்தைத் தாக்கிய ஒரு சூரிய வெப்ப உமிழ்வு (CME) ஐ உருவாக்கியது என்ற நிலையில் இதனால் G4-நிலை புவி காந்த புயல் (கடுமையானது) ஏற்பட்டது.
  • மிகவும் அதிக உயரத்தில் (300 கி.மீ.க்கு மேல்) கிளர்ச்சியுற்ற ஆக்ஸிஜன் அணுக்கள் காரணமாக சிவப்பு தென்முனைச் சுடரொளி ஏற்பட்டது.
  • இந்தப் புயலின் போது பூமியின் காந்த மண்டலத்தின் வலுவான சுருக்கத்தை ஆதித்யா - L1 விண்கலத்தின் தரவுகள் காட்டின.
  • சூரியக் கதிர்வீச்சுப் புயல்கள் செயற்கைக் கோள்கள், புவியிடங்காட்டி, தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் மின் கட்டங்களைச் சீர்குலைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்