TNPSC Thervupettagam

சூரியசக்தி உற்பத்தியில் சாதனை வளர்ச்சி

April 12 , 2026 15 hrs 0 min 5 0
  • 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியா இதுவரை இல்லாத அளவாக 45 ஜிகாவாட் (GW) சூரியசக்தித் திறனைக் கூடுதலாகச் சேர்த்துப் பதிவு செய்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 6.65 GW சூரியசக்தித் திறன் சேர்க்கப் பட்டுள்ள நிலையில் இது ஒரு மாதத்தில் சேர்க்கப்பட்ட மிக அதிகபட்ச அளவு ஆகும்.
  • ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் சூரியசக்தி வளர்ச்சியில் முன்னணியில் உள்ளன.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி உலகளவில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.
  • மொத்த மின் உற்பத்தியில் புதைபடிவமற்ற எரிபொருட்களின் பங்களிப்பு 29.2% ஆக உள்ளது என்ற நிலையில் 2025 ஆம் ஆண்டில் புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து 50% நிறுவப்பட்ட திறனை இந்தியா எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்