சூரியசக்தி சார் பரவளைய ஆடி ஒளிகுவிப்பு தொழில்நுட்பம்
September 12 , 2024 327 days 264 0
சூரியசக்தி சார் பரவளைய ஆடி ஒளிகுவிப்புத் தொழில்நுட்பம் என்பது சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கான மேம்பட்ட அணுகுமுறையாகும்.
இந்தத் தொழில்நுட்பம் ஆனது ஒரு சிறிய வாங்கியில் சூரிய ஒளியைக் குவிப்பதற்காக பரவளைய வட்டு வடிவ பிரதிபலிப்பான்களைப் பயன்படுத்துவதோடு இது ஆற்றல் செயல்திறனைக் கணிசமாக மேம்படுத்துகிறது.
சூரியசக்தி சார் பரவளைய ஆடி ஒளிகுவிப்பு தொழில்நுட்பத்தின் மிகவும் முக்கிய அம்சமானது அதிக அளவு சூரிய சக்தியை ஒரு புள்ளியில் குவிக்கும் திறனில் உள்ளது.
இந்தச் செறிவூட்டப்பட்ட சூரிய சக்தி (CSP) முறையானது ஒரு வழக்கமான சூரிய சக்தி தகடுகளுடன் ஒப்பிடும் போது மிக அதிக வெப்பநிலை மற்றும் திறம் மிக்க மின்சார உற்பத்திக்கு வழி வகுக்கிறது.
இந்தத் தொழில்நுட்பம் ஆனது, குறைந்த ஒளி வீசும் நிலைகளிலும் ஆற்றலை உற்பத்தி செய்யக் கூடியது என்பதால், இது பல்வேறு வகைச் சூழல்களுக்கு பல்துறை தீர்வாக அமைகிறது.