சூரியனில் ஒரு பெரிய சூரியச் சுழல் மற்றும் ஒரு பெரிய பிளாஸ்மா வெடிப்பு ஒன்றாக நிகழும் அரிய படங்களை ருமேனிய அறிவியலாளர் படம் பிடித்துள்ளார்.
சுமார் 130,000 கிமீ உயரத்தை எட்டிய சூரியச் சுழல் ஆனது, சூரியனின் காந்தப் புலத்தால் வடிவமைக்கப்பட்ட, பத்து பூமிகளை அடுக்கி வைத்த உயரத்தினை விட உயரமானது.
வெடிப்பு ஆனது தோராயமாக 200,000 கிமீ வரை பரவி, பூமிக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத வகையிலான ஒரு சூரிய வெப்ப உமிழ்வினை (CME) வெளியிட்டது.
இந்த நிகழ்வு ஆனது சூரியனின் 11 ஆண்டு காலச் சூரியச் சுழற்சியின் உச்ச நிலையை நெருங்கும் போது நிலவும் அதன் மாறுநிலையான காந்தச் செயல்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.