TNPSC Thervupettagam

சூரியனின் மறைந்திருக்கும் பிளாஸ்மா ஓட்டம்

July 23 , 2026 3 days 97 0
  • சூரியனின் மேல் குரோமோஸ்பியரில் மறைந்திருக்கும் மெரிடியனல் பிளாஸ்மா ஓட்டத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர், இது செயற்கைக்கோள்கள், வழிச் செலுத்தல், தகவல் தொடர்பு மற்றும் மின் தொகுப்புகளை பாதிக்கும் விண்வெளி வானிலை பற்றிய புரிதலை மேம்படுத்துகிறது.
  • இந்த ஆய்வை ஆரியபட்டா ஆய்வு அறிவியல் நிறுவனம் (ARIES) மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (PRL), இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் டெல்லி (IIT Delhi), இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IIST) மற்றும் நாசாவின் கோடார்ட் விண்வெளிப் பயண மையம் ஆகியவை இணைந்து நடத்தின.
  • மெரிடியனல் ஓட்டம் என்பது சூரியனின் பூமத்திய ரேகையிலிருந்து துருவங்களுக்கு பிளாஸ்மாவின் மெதுவான இயக்கமாகும் என்ற நிலையில் இது புலப்படும் மேற் பரப்பிற்கு மேலே சுமார் 3,000 கிமீ தொலைவில் உள்ளது மற்றும் 11 ஆண்டு சூரிய சுழற்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • 5-15 மீ/வி வேகத்தில் பிளாஸ்மா துருவங்களை நோக்கி நகர்வதைக் கண்டறிய, ஜப்பானின் நோபேயாமா ரேடியோஹீலியோகிராஃப்-இன் (NoRH) 27 ஆண்டுக்கால அவதானிப்புகளைப் பகுப்பாய்வு செய்ய அறிவியலாளர்கள் ஒரு புதிய படத்-தொடர்பு நுட்பத்தைப் பயன்படுத்தினர்.
  • இந்தக் கண்டுபிடிப்பு சூரிய டைனமோ பற்றிய புரிதலை மேம்படுத்துகிறது மற்றும் சூரியப் புயல்கள் மற்றும் பிற விண்வெளி வானிலை நிகழ்வுகளின் முன்னறிவிப்பை மேம்படுத்த உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்