நமது சூரியனில் ஹீலியம் வாயுவானது மிகுதியாக இருப்பதை ஒரு புதிய ஆய்வு முதன் முறையாக துல்லியமாக மதிப்பிட்டுள்ளது.
ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியாக சூரியனில் மிகுதியாக உள்ள இரண்டாவது தனிமம் ஹீலியம் ஆகும்.
ஆனால் சூரியனின் ஒளிக் கோளத்தில் இந்த ஹீலியம் எவ்வளவு மிகுதியாக உள்ளது என்பதைத் துல்லியமாக அளவிடுவது நீண்ட காலச் சவாலாக இருந்து வந்தது.
ஹீலியம் வாயுவானது சூரியனின் புலப்படும் மேற்பரப்பில் (ஒளிக் கோளம்) இருந்து புலனாகும் நிறமாலை கோடுகளை உருவாக்கவில்லை.
இப்புதிய முறைமையானது நடுநிலை மின்னூட்டம் கொண்ட மெக்னீசியம் (Mg) அணு கோடுகள் மற்றும் மெக்னீசியம் ஹைட்ரைடு (MgH) மூலக்கூறுக் கோடுகளிலிருந்து உயர் தெளிவுத் திறன் கொண்ட சூரிய நிறமாலைத் தரவைப் பகுப்பாய்வு செய்தது.