செக்ரடகோஜின் - உடல் பருமனால் தூண்டப்பட்ட நீரிழிவு நோய்
November 26 , 2019 2090 days 783 0
ஹைதராபாத்தில் உள்ள செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தைச் (Centre for Cellular and Molecular Biology - CCMB) சேர்ந்த விஞ்ஞானிகள் செக்ரடகோஜின் (secretagogin - SCGN) என்ற ஒரு புதிய புரதத்தை கண்டுபிடித்துள்ளனர்.
SCGN என்பது நீரிழிவு நோயாளிகளில் இன்சுலினின் செயல்திறனை அதிகரிக்க உதவும் ஒரு சிறப்பு வகைப் புரதமாகும்.
இது உடலில் இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கின்றது. இது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றது.
இது மில்லியன் கணக்கான (10 இலட்சத்திற்கும் மேற்பட்ட) மக்களைப் பாதிக்கும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் ஒரு திருப்புமுனையாக மாற இருக்கின்றது.