திருப்பூரில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் முதன்முறையாக செங்கழுத்து உள்ளான் (பலரோபஸ் லோபாட்டஸ்) தென்பட்டது.
இது பொதுவாக உள்நாட்டு நீர்நிலைகளில் அல்லாமல் கடலோர அல்லது கடல் பகுதிகளில் காணப்படும் ஓர் அரிய இனமாகும்.
இது சரணாலயத்தில் பதிவு செய்யப்பட்ட 192வது பறவை இனமாகும்.
ஆர்டிக்கிலும் தென்கிழக்கு நாடுகளில் குளிர்காலத்திலும் இனப்பெருக்கம் செய்கின்ற இந்தப் பறவையானது, சுழலும் நுட்பத்தைப் பயன்படுத்தி முதுகெலும்பில்லாத மிதவை வாழ் உயிரினங்களை உண்கிறது.