TNPSC Thervupettagam

செனெஜோரி திட்டம்

June 6 , 2026 8 days 106 0
  • அஸ்ஸாமின் முகா பட்டினை உலகளாவிய ஆடம்பர தர அடையாளம்/பிராண்டாக மேம்படுத்துவதற்காக, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறையின் (DoNER) மத்திய அமைச்சர் செனெஜோரி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • செனெஜோரி திட்டம் என்பது அஸ்ஸாமில் மட்டுமே காணப்படும் முகா பட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஒரு தொகுப்பு அடிப்படையிலான ஜவுளி முன்னெடுப்பாகும்.
  • முகா பட்டு வளர்ப்போர் மற்றும் நெசவாளர்களின் வருமானத்தை அதிகரிப்பது மற்றும் புவிசார் குறியீடு (GI) பெற்ற முகா பட்டுக்கான உலகளாவியச் சந்தையை வலுப்படுத்துவது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இது தோட்ட விரிவாக்கம், நவீன நூற்பு அலகுகள், QR குறியீடுகள் மூலம் டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPO) உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இத்திட்டம் 2028-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் 2,000 கிலோவுக்கும் அதிகமான முகா பட்டு ஏற்றுமதியை இலக்காகக் கொண்டுள்ளது மற்றும் முகா பட்டுப் பாதை, பட்டு சுற்றுலாப் பூங்கா மற்றும் முகா உத்சவ் ஆகியவற்றின் மூலம் பட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கிறது.
  • முகா பட்டு உலகின் ஒரே இயற்கையான தங்கப் பட்டு என்று அழைக்கப்படுகிறது மற்றும் இது அஸ்ஸாமின் தனித்துவமான கலாச்சாரப் பாரம்பரியத் தயாரிப்பு ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்