TNPSC Thervupettagam
November 23 , 2025 19 days 98 0
  • சென்டினல்-6B அமெரிக்காவின் கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
  • இது கடல் மட்டம் மற்றும் கடல் வெப்பநிலையை அளவிட ஆறு அறிவியல் கருவிகளைக் கொண்ட ஒரு கடல் கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும்.
  • இந்த செயற்கைக்கோள் ஆனது வினாடிக்கு 7.2 கிமீ வேகத்தில் பூமியை சுற்றி வருகிறது என்பதோடு மேலும் ஒவ்வொரு 112 நிமிடங்களுக்கும் ஒரு சுழற்சியை நிறைவு செய்கிறது.
  • சென்டினல்-6B செயற்கைக் கோளிலிருந்து பெறப்படும் பல்வேறு தரவுகள் வானிலை முன்னறிவிப்புகள், புயல் மற்றும் வெள்ள முன்னறிவிப்புகளை மேம்படுத்தும் மற்றும் கடலோர உள்கட்டமைப்பைப் பாதுகாக்கும்.
  • இது நாசா (அமெரிக்கா), NOAA (அமெரிக்கா) மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்