TNPSC Thervupettagam

சென்னா ஸ்பெக்டபிலிஸ் ஊடுருவல்

September 7 , 2025 4 days 21 0
  • 1980 ஆம் ஆண்டுகளில், வேகமாக வளரும் மரமான சென்னா ஸ்பெக்டபிலிஸ் தென் அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை ஆக்கிரமித்து, பூர்வீகத் தாவரங்கள் மற்றும் வனவிலங்கு வாழ்விடங்களைச் சீர்குலைத்துள்ளது.
  • கேரளாவின் வயநாடு வனவிலங்குச் சரணாலயம் இந்தியாவின் முதல் அறிவியல் அடிப்படையிலான, சமூகம் தலைமையிலான ஒழிப்பு முயற்சியை மேற்கொண்டது.
  • நாகர்ஹோலே புலிகள் வளங்காப்பகத்தில் உள்ள DB குப்பே வனச் சரகம் வரையில் இதன் அகற்றல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக Forest First Samithi அமைப்பானது கர்நாடகா அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • தமிழ்நாடு மாநிலமும் இதே போன்ற அகற்றும் திட்டங்களை மேற்கொள்வதற்கான மதிப்பீடுகளை செய்து வருகிறது, அதே நேரத்தில் ஆந்திரப் பிரதேசம், கோவா மற்றும் மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் ஆரம்ப கட்ட சென்னா மரப் பரவல் உள்ளதாகப் பதிவாகியுள்ளன.
  • ஒவ்வொரு சென்னா மரமும் ஒரு பருவத்திற்கு 6,000 விதைகளை உற்பத்தி செய்யக் கூடியது என்பதோடு இந்த விதைகள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முளைப்பதற்கான சாத்தியக் கூறினைக் கொண்டவை மற்றும் அகற்றப்பட்ட விறகுகளிலிருந்து கூட மீண்டும் வளரக் கூடியவை.
  • ஒரு சோதனைத் திட்டம் ஆனது 6,000 டன் அகற்றப்பட்ட சென்னா மரப் பொருட்களை காகிதக் கூழாக மாற்றியது இருப்பினும் அதன் பரவலைத் தடுக்க முழு வேர் அகற்றுதல் அவசியம் என்று சூழலியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • ரஃபோர்ட் அறக்கட்டளையின் 2021 ஆம் ஆண்டு ஆய்வில், சென்னா மரம் வயநாடு வனவிலங்குச் சரணாலயத்தின் 23 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது என்பதோடு அதன் பரவல் மேலும் அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்