சென்னை துறைமுக ஆணையமானது, உமிழ்வுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அதன் முதல் பசுமை இழுவைப் படகுகளை வாங்குவதற்கான செயல் முறையைத் தொடங்கியுள்ளது.
இந்தத் துறைமுகம் தற்போது கப்பல்களை இயக்குவதற்கும் கடல் செயல்பாடுகளைக் கையாளுவதற்கும் பயன்படுத்தப்படும் மூன்று டீசல் எரிபொருளில் இயங்கும் இழுவைப் படகுகளை இயக்குகிறது.
பசுமை இழுவை படகு மாற்றத் திட்டம் ஆனது டீசல் எரிபொருளில் இயங்கும் இழுவைப் படகுகளை அம்மோனியா, ஹைட்ரஜன் அல்லது மெத்தனால் மூலம் இயக்கப் படும் படகுகளைக் கொண்டு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்மொழியப்பட்ட பசுமை இழுவை படகு ஆனது, 60 டன் இழுவைத் திறனைக் கொண்டிருக்கும் மற்றும் ஒப்பந்தம் வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார இழுவைப் படகுகள் நைட்ரஜன் மற்றும் கார்பன் உமிழ்வினை 100% குறைக்கின்ற அதே நேரத்தில் கலப்பின எரிபொருளில் இயங்கும் இழுவைப் படகுகள் சுமார் 25% முதல் 35% வரையிலான உமிழ்வுக் குறைப்பை அடைகின்றன.