சென்னை துறைமுகத்தில் இருந்து வங்கதேசத்தின் மோங்லா துறைமுகத்திற்கு ரோரோ கப்பல் பயணம்
October 29 , 2017 2841 days 1028 0
பொதுவகை சரக்கு கப்பலும் ‘ரோரோ’(Ro-Ro) (Ro-Ro) வகையினையும் சேர்ந்த எம்.வி.ஐ,டி,எம் டூடுள் (V. IDM DOODLE ) என்ற கப்பலின் சென்னை துறைமுகத்திலிருந்து வங்கதேசத்தின் மோங்லா துறைமுகத்திற்க்கான பயணத்தை, மத்திய நீர்வளத்துறை அமைச்சரான நிதின்கட்கரி இலக்கமுறையில் தொடங்கிவைத்தார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான கடல்வழி கப்பல் போக்குவரத்து ஒப்பந்தமானது (Coastal Shipping Agreement) ஜீன் 2015ல் பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேசப் பயணத்தின் போது கையெழுத்திடப்பட்டது.
இந்தியத் துறைமுகங்களிலிருந்து வங்கதேசத்தின் துறைமுகங்கள் வரையிலான கடல்வழிப் போக்குவரத்தானது உடன்படிக்கையின் அடிப்படையில் உள்நாட்டு கடலோரப் போக்குவரத்துக்கு இணையாக கருதப்படுவதால், கப்பல் மற்றும் சரக்கு தொடர்பான கட்டணங்களில் 40% சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்திய துறைமுகங்களில் ரோரோ கப்பல்கள் மூலமான கடல்வழிப் போக்குவரத்துக்கு, சரக்கு மற்றும் கப்பல் தொடர்பான கட்டணங்களில் 80% சலுகைகள் வழங்கப்படுகிறன.
கடல்வழிப் போக்குவரத்தில் ஒரு டன் சரக்குகளுக்கான எரிபொருள் செலவு மிகவும் குறைவாக உள்ளதால் கடல்வழிப் போக்குவரத்தானது சுற்றுச்சூழலில் கரிமத்தின் அடிச்சுவட்டை (Carbon Footprint) குறைக்க உதவும்.