TNPSC Thervupettagam

சென்னை நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பு

June 27 , 2026 13 hrs 0 min 19 0
  • சென்னை பெருநகரப் பகுதியில் நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பு (ITS) திட்டத்திற்காக ₹500 கோடிக்கும் மேலான நிதியை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
  • இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ₹645.59 கோடியாகும், மேலும் இது ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம் (JICA) இருந்து மத்திய அரசு பெறும் கடனுதவி மூலம் நிதியளிக்கப் படுகிறது.
  • இத்திட்டத்தில் 165 சந்திப்புகளில் தகவமைக்கக்கூடிய போக்குவரத்து சமிக்ஞைக் கட்டுப்பாடு, 58 இடங்களில் போக்குவரத்து சம்பவங்களைக் கண்டறியும் அமைப்புகள், 17 இடங்களில் மாறக் கூடிய செய்திப் பலகைகள் மற்றும் 50 சந்திப்புகளில் சிவப்பு விளக்கு விதிமீறலைக் கண்டறியும் அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
  • இது சென்னை திறன்மிகு நகர நிறுவனத்தின் மூலம் பல நிறுவனங்களின் ஆதரவுடன் செயல்படுத்தப் பட்டு வருகிறது, மேலும் 17 இடங்களில் இதற்கான சோதனைத் திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியது.
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் 6 நிலவரப்படி, அடையாளம் காணப்பட்ட 165 சந்திப்புகளில் 104 சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன, மேலும் இந்த அமைப்பு 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாகச் செயல்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்