சென்னை பல்கலைக் கழகத்திற்குத் தன்னாட்சி கல்வி நிறுவன அந்தஸ்து
August 19 , 2024 362 days 282 0
சென்னை பல்கலைக்கழகம் தற்போது முதல் வகை கல்வி நிறுவனமாக அந்தஸ்து பெறுவதாக பல்கலைக்கழக மானியக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தப் பல்கலைக்கழகம் ஆனது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார வழங்கீட்டுச் சபையிடமிருந்து A++ தர நிலையினைப் பெற்றது.
ஜூலை 24 ஆம் தேதியன்று பல்கலைக்கழக மானியக் குழுவானது அதன் 582வது கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத்தினை முதல் வகை பல்கலைக்கழகமாக தர நிலைப்படுத்த முடிவு செய்தது.
அதாவது இந்த பல்கலைக்கழகம் ஆனது முழுமையான தன்னாட்சியினைக் கொண்டு உள்ளது என்பதோடு விதிமுறைகளின்படி முதல் வகை பல்கலைக்கழகங்களுக்கான தன்னாட்சியின் 4வது பரிமாணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பலன்களையும் பெற தகுதியுடையது.