சென்னை மெட்ரோ இரயில் மூலமான முதல் உறுப்பு இடமாற்ற பணி
November 12 , 2025 4 days 44 0
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை மெட்ரோ இரயில் (CMRL) நிர்வாகமானது தானமாக வழங்கப்பட்ட ஓரிணை நுரையீரல்களைக் கொண்டு செல்வதற்கான ஒரு பசுமை வழித்தடமாக செயல்பட்டது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் தேதியன்று, மீனம்பாக்கம் மெட்ரோவிலிருந்து AG-DMS மெட்ரோவிற்கு, 21 நிமிடங்களில் 10.82 கிலோமீட்டர் தூரத்தை கடந்து உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டன.
இது CMRL அதிகாரிகளால் சுமூகமாக ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் மெட்ரோ வழியான உறுப்பு இடமாற்றத்தினைக் குறிக்கிறது.