சென்னைக்கான விரிவான போக்குவரத்துத் திட்டம் (CMP) ஆனது மெட்ரோ இரயில், LRT (இழுவை இரயில்-லைட் இரயில் போக்குவரத்து), RRTS (பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு) மற்றும் ஒரு தடவண்டி/டிராம் பாதைக்கான எதிர்கால வழித் தடங்களை அடையாளம் கண்டுள்ளது.
தியாகராய நகர், நுங்கம்பாக்கம், நந்தனம் மற்றும் கலங்கரை விளக்கம் பகுதிகளை இணைக்கும் 15.4 கிலோ மீட்டர் தூர டிராம் வலையமைப்பு CMP திட்டத்தில் முன் மொழியப் பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் நீண்டகால மேம்பாட்டிற்காக 12 மெட்ரோ இரயில் வழித்தடங்கள், 6 LRT வழித்தடங்கள், 1 டிராம் வழித்தடம் மற்றும் 4 RRTS வழித்தடங்கள் பட்டியலிடப் பட்டு உள்ளன.
CMP திட்டத்தில் SIPCOT II–கலைஞர் மாநாட்டு மையம் மற்றும் அசிசி நகர்–விம்கோ நகர் போன்ற புதிய மெட்ரோ இரயில் வழித்தடங்கள் அடங்கும்.
சென்ட்ரலில் இருந்து கோவளம் வரை (மாமல்லபுரம் வரையிலான நீட்டிப்புடன்) நீர்வழி மெட்ரோ பாதையும், எண்ணூர் மற்றும் பழவேற்காடு நோக்கி மற்றொரு பாதையும் இதில் சேர்க்கப் பட்டுள்ளது.