TNPSC Thervupettagam

சென்னையின் தொழிற்துறை வரலாறு

August 30 , 2026 14 days 72 0
  • மெட்ராஸ் — பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதன் வணிக வரலாறு வடிவம் பெறத் தொடங்கிய ஒரு நகரம் ஆகும்.
  • மெட்ராஸ் மாகாணத்தின் தொழில் வளர்ச்சி ஒரு தீவிரமான அக்கறைக்குரிய விஷயமாக இருந்தது, மேலும் 1899-ஆம் ஆண்டில், அப்பகுதியில் தொழிற்துறை தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிப்பதற்காக வேண்டி, அப்போது கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இருந்த ஆல்ஃபிரட் சாட்டர்டன் நியமிக்கப்பட்டார்.
  • 1639-ஆம் ஆண்டில் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து, மெட்ராஸ் பருத்தித் துணிகள், அவுரி, தோல்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதை விட ஏற்றுமதி செய்தது.
  • 1880-களில் உருவாக்கப்பட்ட செயற்கைத் துறைமுகம், ஒரு திறந்த துறைமுகத்தை ஒரு செயல்படும் துறைமுகமாக மாற்றியது.
  • 1876-ஆம் ஆண்டில் பின்னியின் பக்கிங்ஹாம் ஆலையும், 1881-ஆம் ஆண்டில் கர்நாடக ஆலையும் பெரம்பூரில் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்தன.
  • சிம்ப்சன் 1840-ஆம் ஆண்டில் குதிரை வண்டி தயாரிப்பைத் தொடங்கினார்.
  • சென்னை இந்தியாவின் டெட்ராய்ட் என்று அறியப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, மெட்ராஸ் வாகனத் துறைக்கான அடித்தளங்களை அமைத்துக் கொண்டு இருந்தது.
  • மெட்ராஸுக்கு வந்த முதல் கார் 1900-களின் முற்பகுதியில் வந்தது. அப்போது நகரின் புகழ்பெற்ற வண்டி தயாரிப்பாளர்களான சிம்ப்சன்ஸ், இதில் ஒரு பங்கு வகித்தனர்.
  • 1948-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஸ்டாண்டர்ட் மோட்டார் ப்ராடக்ட்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் (அசோக் மோட்டார்ஸ்) போன்ற வாகனத் துறையின் முன்னோடிகளுக்கு மெட்ராஸ் தாயகமாக விளங்கியது.
  • அதே சமயம், என்ஃபீல்டு இந்தியா 1956-ஆம் ஆண்டில் இருசக்கர வாகன உற்பத்தியைத் தொடங்கியது.
  • சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (TAFE), இரண்டாவது பெரிய டிராக்டர் உற்பத்தியாளர் ஆகும்.

  • MRF என அறியப்படும் மெட்ராஸ் ரப்பர் தொழிற்சாலை, மெட்ராஸில் ஒரு சிறிய பொம்மை பலூன் உற்பத்தியாளராகத் தனது பயணத்தைத் தொடங்கி, இந்தியாவின் மிகப்பெரிய டயர் தயாரிப்பாளர்களில் ஒன்றாக வளர்ந்தது.
  • இந்தியன் வங்கி 1907-ஆம் ஆண்டில் மெட்ராஸில் தனது பயணத்தைத் தொடங்கியது, அதைத் தொடர்ந்து 1937-ஆம் ஆண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) தொடங்கப் பட்டது.
  • 1958-ஆம் ஆண்டில், மெட்ராஸ், டெல்லியின் ஓக்லாவுடன் இணைந்து, இந்தியாவின் முதல் தொழிற்பேட்டைகளில் ஒன்றான கிண்டி தொழிற்பேட்டையைத் திறந்தது.
  • 2030-ஆம் ஆண்டிலும் சென்னை ஒரு வாகன, மின்னணு மற்றும் சேவை நகரமாகவே திகழும்; மேலும், உலகளாவிய திறன் மையம் (GCC - Global capability center) அதன் அதிக ஊதியம் வழங்கும் முதலாளிகளாகத் தொடரும்.
  • மெட்ராஸ் அதன் அடித்தளத்தை அமைத்தது, அதற்கு அடுத்த கட்டத்தை சென்னை கட்டமைத்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்