சென்னையின் நீடித்த மற்றும் நிலையான நகர்ப்புறச் சேவைகள்
October 5 , 2021 1412 days 696 0
சென்னையின் நீடித்த மற்றும் நிலையான நகர்ப்புறச் சேவைகளுக்கு உதவி வழங்கச் செய்வதற்காக வேண்டி 150 மில்லியன் டாலர் அளவிலான திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நகரத்தை “உலகத்தரம் வாய்ந்த நகரமாக” மாற்ற வேண்டி இந்த முயற்சியானது மேற்கொள்ளப்படுகிறது.
இந்தத் திட்டமானது சென்னையை மேலும் பசுமை வாய்ந்த, வாழ்வதற்கு ஏதுவான மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் ஒரு நகரமாக மாற்றுவதற்கான தமிழக அரசின் குறிக்கோளினை நிறைவேற்றச் செய்யும்.
இது நகரின் நான்கு முக்கிய நகர்ப்புறச் சேவைகளின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டு வரும். அவை
தண்ணீர் வழங்கீடு மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பு
இயங்குதிறன் (போக்குவரத்து)
சுகாதாரம் மற்றும்
திடக்கழிவு மேலாண்மை
தமிழ்நாட்டிற்கான இத்திட்டம் தவிர, மேகாலயா மாநிலத்திலும் சுகாதாரச் சேவைகளின் தர மேம்பாட்டிற்கான 40 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்திற்கும் உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.