பல இந்திய நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னையில் PM2.5 (நுண் துகள்கள்) அளவு குறைவாக இருந்தது.
கொடுங்கையூர் நிலையத்தில் 40 µg/m³ தரநிலையானது தேசிய தரநிலையை விடக் 12.6 µg/m³ குறைவாகப் பதிவாகியது.
இது 2024 ஆம் ஆண்டில் நாட்டிலேயே மிகக் குறைந்த ஆண்டு சராசரி PM2.5 அளவைப் பதிவு செய்தது.
சென்னையில் பல பகுதிகளில் PM2.5 அளவு 20 µg/m³ என்ற அளவிற்குக் கீழே பதிவாகி உள்ளது.
PM10 (பெரிய தூசித் துகள்கள்) மாசுபாடு சென்னை மாநகரில் ஒரு பெரியச் சவாலாக உள்ளது.
வேளச்சேரியில் PM10 அளவு 47 µg/m³ ஆக பதிவாயுள்ளது என்பதோடு, இது 60 µg/m³ என்ற தேசிய வரம்பிற்குள் உள்ளது.
கடல் காற்று போன்ற கடலோர இயற்கை காரணிகள் சென்னையில் PM2.5 அளவைக் குறைக்க உதவின.
PM10 என்பது சாலை தூசி, கட்டுமானச் செயல்பாடுகள் மற்றும் மண் மறுசீரமைப்பு ஆகியவற்றுடன் பெரும்பாலும் தொடர்புடைய கரடுமுரடான துகள்களைக் குறிக்கிறது.
டெல்லி-என்சிஆர் பகுதி (தேசியத் தலைநகரப் பகுதி) PM10 மற்றும் PM2.5 இரண்டிற்கும் மிகவும் மாசுபட்ட இடங்களின் பட்டியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது என்பதோடுஅங்கு பல நிலையங்களில் ஆண்டு PM10 அளவுகள் 250 µg/m³ என்பதைத் தாண்டிச் செல்கின்றன.