TNPSC Thervupettagam

ஈட்டி மரங்கள் பாதுகாப்புச் சட்டம் ரத்து

July 2 , 2025 2 days 44 0
  • 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காலாவதியான 1994 ஆம் ஆண்டு ஈட்டி மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தினைப் புதுப்பிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு அரசானது முடிவு செய்துள்ளது.
  • சட்டவிரோதமாக மரம் வெட்டல் நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படும் அரிய மற்றும் பெரு மதிப்புமிக்க மரமான டால்பெர்ஜியா லாட்டிஃபோலியாவை (ஈட்டி மரம்) பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.
  • இது முதன்முதலில் 1995 ஆம் ஆண்டில் 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டது, பின்பு 2010 ஆம் ஆண்டில் ஒரு முறை நீட்டிக்கப்பட்டது.
  • இந்தச் சட்டமானது விவசாயிகள் தங்கள் தனியார் நிலங்களில் (பட்டா நிலங்கள்) ஈட்டி மரம் வளர்ப்பதைத் தடை செய்தது.
  • இந்தச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது விவசாயிகள் ஈட்டி மரத்தினை சிறந்த விலையில் விற்கவும், அதன் மிகவும் பரந்த அளவிலான சாகுபடியை ஊக்குவிக்கவும் அனுமதிக்கும்.
  • விவசாயிகளுக்கான பெரும் பொருளாதாரப் பலன்களுடன் அதன் வளங்காப்பினை சமநிலைப் படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டு இந்த ஒரு முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்