2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காலாவதியான 1994 ஆம் ஆண்டு ஈட்டி மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தினைப் புதுப்பிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு அரசானது முடிவு செய்துள்ளது.
சட்டவிரோதமாக மரம் வெட்டல் நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படும் அரிய மற்றும் பெரு மதிப்புமிக்க மரமான டால்பெர்ஜியா லாட்டிஃபோலியாவை (ஈட்டி மரம்) பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.
இது முதன்முதலில் 1995 ஆம் ஆண்டில் 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டது, பின்பு 2010 ஆம் ஆண்டில் ஒரு முறை நீட்டிக்கப்பட்டது.
இந்தச் சட்டமானது விவசாயிகள் தங்கள் தனியார் நிலங்களில் (பட்டா நிலங்கள்) ஈட்டி மரம் வளர்ப்பதைத் தடை செய்தது.
இந்தச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது விவசாயிகள் ஈட்டி மரத்தினை சிறந்த விலையில் விற்கவும், அதன் மிகவும் பரந்த அளவிலான சாகுபடியை ஊக்குவிக்கவும் அனுமதிக்கும்.
விவசாயிகளுக்கான பெரும் பொருளாதாரப் பலன்களுடன் அதன் வளங்காப்பினை சமநிலைப் படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டு இந்த ஒரு முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளது.