தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவானது, 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் இரண்டாவது அட்டவணையின் கீழ் செம்முகக் குரங்குகளை (ரீசஸ் மக்காக்) மீண்டும் சேர்ப்பதற்குப் பரிந்துரைத்துள்ளது.
இரண்டாம் அட்டவணையில் இதனை மீண்டும் சேர்ப்பது சட்டப்பூர்வப் பாதுகாப்பை மீண்டும் கொண்டு வரும் மற்றும் அந்த இனங்களின் மீதான அறிவியல் பூர்வ மேலாண்மையை ஒழுங்குபடுத்தும்.
இந்த நடவடிக்கையானது அவற்றைச் சட்டவிரோதமாக பிடிப்பது, கொடுமைப் படுத்துதல் மற்றும் மோசமாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றினைத் தடுப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் இந்தப் பரிந்துரையை ஆதரிக்கின்றன.
இந்த உயிரினங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்றும், மோதல் மேலாண்மை காரணங்களுக்காகவும், மற்ற மாநிலங்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்தன.
ஒரு குறிப்பிட்டத் தளம் சார்ந்த மேலாண்மை மற்றும் வளங்காப்புத் திட்டங்களைக் கோட்ட வன அதிகாரிகள் மற்றும் வனத் துணை வளங்காவலர்கள் தயாரிக்க வேண்டும்.