செம்மொழியாக அறிவிக்கப் படுவதற்கான நிபந்தனைகளில் மாற்றம் 2024
July 16 , 2024 390 days 368 0
இந்தச் சிறப்பு அந்தஸ்தினை வழங்குவதற்கான சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது ஆறு செம்மொழிகள் உள்ளன – அவை தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியனவாகும்.
இந்திய அரசானது, கடைசியாக 2014 ஆம் ஆண்டில்தான் இந்தச் சிறப்பு அந்தஸ்தினை (ஒடியா) வழங்கியது.
மராத்தி, வங்காளம், அசாமி மற்றும் மைதிலி போன்ற மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தற்போது சில மாநிலங்கள் மற்றும் இலக்கிய வட்டாரங்களில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இவற்றில் மராத்தி மொழிக்கான செம்மொழி அந்தஸ்து கோரிக்கை என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.