செயற்கை கருவூட்டலைப் பயன்படுத்தி பிறந்த உலகின் முதலாவது சிங்கக் குட்டிகள்
October 5 , 2018 2467 days 881 0
தென் ஆப்பிரிக்காவின் ப்ரிடோரியாவில் செயற்கைக் கருவூட்டல் முறையில் உலகின் முதலாவது சிங்கக் குட்டிகள் பிறந்திருக்கின்றன.
அக்குட்டிகளைப் பராமரிப்பவர்கள் புதிதாகப் பிறந்த சிங்கக் குட்டிகளுக்கு இசபெல் மற்றும் விக்டர் என்று பெயரிட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க பெண் சிங்கங்களின் இனப்பெருக்க முறையை ஆய்வு செய்து 18 மாத சோதனை மூலம் விஞ்ஞானிகள் இதை நிறைவேற்றியுள்ளனர்.
ஆப்பிரிக்க சிங்கங்கள் தற்பொழுது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தினால் (International Union for Conservation of Nature - IUCN) “பாதிக்கப்படக் கூடிய விலங்கினமாக” வகைப்படுத்தப்பட்டுள்ளன.