குஜராத்தில் உள்ள பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPR) SST-1 டோகாமாக்கில் புதிய 82.6 GHz, 400 kW கைரோட்ரானை நிறுவியதன் மூலம் இந்தியாவின் இணைவு ஆராய்ச்சி முன்னேற்றம் அடைந்துள்ளது.
SST-1 (நிலையான-நிலை மீக்கடத்து டோகாமாக்-1) என்பது இணைவு ஆராய்ச்சிக்காக காந்தரீதியாக வரையறுக்கப்பட்ட சூடான பிளாஸ்மாவை ஆய்வு செய்யும் ஒரு சோதனை இயந்திரமாகும்.
புதிய கைரோட்ரான் ஆனது எலக்ட்ரான் சைக்ளோட்ரான் ஒத்ததிர்வு வெப்பமூட்டல் (ECRH) சோதனைகளுக்கு 400 kW வரையிலான ரேடியோ அதிர்வெண் (RF) ஆற்றலை வழங்குகிறது.
SST-1 ஏற்கனவே சூரியனின் மையப்பகுதியை விட மிகவும் வெப்பமான 200 மில்லியன் டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான பிளாஸ்மா வெப்பநிலையை அடைந்துள்ளது.
இந்த அமைப்பானது ஏற்கனவே உள்ள 42 GHz, 500 kW ECRH அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது, இது அறிவியலாளர்களுக்கு பிளாஸ்மா வெப்பமாக்கல், கட்டுப்பாடு மற்றும் நிலைத் தன்மையை ஆய்வு செய்ய உதவுகிறது.