செயற்கை நுண்ணறிவினால் வடிவமைக்கப்பட்ட வைரசின் மரபணுக் கூறு
September 27 , 2025 21 days 67 0
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆர்க் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் முழுமையாக செயற்கை நுண்ணறிவினால் வடிவமைக்கப்பட்ட செயல்பாட்டு வடிவிலான உலகின் முதல் வைரஸ் மரபணுக் கூறினை உருவாக்கினர்.
செயற்கை நுண்ணறிவினால் வடிவமைக்கப்பட்ட வைரஸ், எஸ்கெரிச்சியா கோலி பாக்டீரியாவைப் பாதிக்கும் ΦX174 எனப்படும் ஒரு பாக்டீரியோபேஜ் ஆகும்.
Evo என பெயரிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிக்கு, ஆயிரக்கணக்கான மாதிரி மரபணுக்களை உருவாக்க இரண்டு மில்லியன் வைரஸ் மரபணுக்களில் பயிற்சி அளிக்கப் பட்டது.
செயற்கை நுண்ணறிவினால் வடிவமைக்கப்பட்ட 302 மரபணுக்களில், 16 மரபணுக்கள் பாக்டீரியாக்களை வெற்றிகரமாகப் பாதித்து ஆய்வக சோதனைகளில் அதைப் பிரதி எடுத்தன.
செயற்கை நுண்ணறிவினால் வடிவமைக்கப்பட்ட வைரஸ்கள் இயற்கையில் ஒரு போதும் காணப்படாத நூற்றுக் கணக்கான பிறழ்வுகளைக் கொண்டிருந்தன.