செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் வானிலை முன்னறிவிப்பு
September 18 , 2025 4 days 38 0
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஆனது, 2025 ஆம் ஆண்டில் 13 மாநிலங்களில் 3.8 கோடி விவசாயிகளுக்கு பருவமழை முன்னறிவிப்புகளை அனுப்ப செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தியது.
விவசாயத்திற்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வானிலை முன்னறிவிப்புகளின் இலக்கு சார்ந்த பரப்புதல் இந்தியாவில் முதல் முறையாக மேற் கொள்ளப் பட்டது.
மழைப்பொழிவிற்கு நான்கு வாரங்களுக்கு முன்பு வரை m-Kisan தளத்தின் கீழ் SMS மூலம் முன்னறிவிப்புகள் அனுப்பப்பட்டன.
பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் கூகிளின் வலையமைப்பு GCM (உலகளாவிய சுழற்சி மாதிரி) மற்றும் ECMWF மையத்தின் (நடுத்தர தூர வரம்பிலான வானிலை முன்னறிவிப்புகளுக்கான ஐரோப்பிய மையம்) செயற்கை நுண்ணறிவு முன்னறிவிப்பு அமைப்புகள் (AIFS) ஆகியவை அடங்கும்.
இந்த மாதிரிகள் ஆனது, பருவமழை தொடக்கத்தையும் இடைநிறுத்தங்களையும் கணிப்பதில் வழக்கமான முன்னறிவிப்புகளை விஞ்சியது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த முன்னறிவிப்புகள் பருவமழை முன்னேற்றத்தின் நடுப்பகுதியில் 20 நாட்கள் அளவிலான இடைநிறுத்தத்தை சரியாக கணித்தன.
விவசாயிகள், தொடர்ச்சியான மழைப் பொழிவு தங்கள் பகுதிகளை அடையும் வரை அது குறித்த வாராந்திர முன்னறிவிப்புகளைப் பெற்றனர்.