செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இருப்புப்பாதை கடப்பு முன்னெச்சரிக்கை அமைப்பு
February 14 , 2024 587 days 415 0
பயண இயக்கத்தில் உள்ள இரயில்களால் யானைகள் தாக்கப்படாமல் இருப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தமிழ்நாடு வனத் துறையால் அறிமுகம் செய்யப் பட்டது.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மற்றும் இயந்திரக் கற்றல் மூலம் இயக்கப் படும் இந்த அமைப்பு ஆனது, இரட்டை ஒற்றைக் கோட்டிற்கு அருகில் வரும் அல்லது தண்டவாளங்களைக் கடக்கும் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து எச்சரிக்கைகளை உருவாக்கும்.
நாட்டிலேயே இந்த வகையிலான முதல் வகை முன்னெச்சரிக்கை அமைப்பான இது சுமார் 7 கி.மீ. தொலைவிலான "அதிக எண்ணிக்கையில் யானைகள் பாதிக்கப்படக் கூடிய பகுதியில்" நிறுவப்பட்டுள்ளது.
இது கோயம்புத்தூர் பிரிவில் நடைமுறையில் உள்ளது.
நாளொன்றுக்கு சுமார் 130 இரயில்கள் A மற்றும் B இரயில் பாதைகள் வழியாகச் செல்கின்றன என்ற நிலையில் ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பாதைகளில் சுமார் 1,000 யானைகள் கடந்து செல்கின்றன.